13ஆவது மலேசியத் திட்டத்தை வரைவதில் அனைத்துலக அணுகுமுறையைக் கையாண்ட அரசாங்கம்!
- Muthu Kumar
- 11 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 11-
இவ்வாண்டு அறிமுகம் காணவிருக்கும் 13ஆவது மலேசியத் திட்டத்தை வரைவதில், அரசாங்கம் அனைத்துலக அணுகுமுறையைக் கையாண்டுள்ளது.உலக அரங்கில் மலேசியா சிறந்த பங்கு வகிப்பதற்கு, மாறிவரும் உலகளாவிய சூழலுக்கு ஏற்ப முழுமையான பரிசீலனை தேவைப்படுவதாக பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்தார்.
”உலகளாவிய சூழல் மாறி வருவதுடன், அனைத்து தரப்பினரிடமிருந்தும் கூடுதலான சிந்தனை மாற்றம் வேண்டும் என்பதை இது குறிக்கின்றது. மேலும், மலேசியா போன்ற சிறிய, திறந்த, அணிசேரா (சோனா) நாடுகள், தற்போது எதிர் திசையை நோக்கிச் செல்வதால் சுயவிவரம், அணுகுமுறை மற்றும் பார்வை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்," என்று கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற மலேசிய பொருளாதார மாநாட்டில் பேசிய ரபிசி கூறினார்.
மேலும், வரும் ஆண்டுகளில் நாட்டை தனித்துவமான முறையில் வடிவமைக்கும் வகையில், மலேசியாவும் தென்கிழக்கு ஆசியாவும் சிறந்த வேறுபாடுகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இதனிடையே, வருகின்ற பத்தாண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரம் 4 முதல் 5 விழுக்காடு வரை உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், 66 கோடியே 50 லட்சம் மக்கள்தொகையுடன், தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பு உலகப் பொருளாதாரத்தில் நான்காவது பெரிய நிலையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



