போதைப்பழக்கம் அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது! - சிலாங்கூர் சுல்தான் வருத்தம்

top-news

ஷா ஆலம்: சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, சமூகத்தினரிடையே போதைப் பழக்கத்தின் மோசமான அச்சுறுத்தல் குறித்து கவலை தெரிவித்தார்.

போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையில் கடந்த ஆண்டை விட 31.6% அதிகரிப்பைக் காட்டும் தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சி (AADK) புள்ளிவிவரங்களை சுல்தான் சுட்டிக்காட்டினார்.

சராசரியாக போதைப் பழக்கத்தின் வலையில் சிக்குபவர்கள் 76.8% மலாய் முஸ்லீம்கள் என்பது வருந்தத்தக்கது என்று சிலாங்கூர் ராயல் அலுவலகத்தின் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போதைப் பழக்கத்தின் பிடியில் இருப்பவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக அவர்களின் அடையாளத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், தன்னம்பிக்கையை மீட்டெடுக்கவும், கடந்த காலத்தை சரிசெய்ய அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கவும் அவர்களுக்கு கல்வி மற்றும் உதவுவதில் பங்களிக்க வேண்டும் என்றும் சுல்தான் ஷராபுதீன் சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்