மாமன்னர் - அன்வார் சந்திப்பு! மாமன்னர் அதிரடி உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 8: மலேசிய மன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம், நாட்டின் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் நுழைவுப் புள்ளிகளில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த இது அவசியம் என்று மன்னர் கூறினார்.

மேலும் திறம்பட அமலாக்குதல், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்கள் மற்றும் முகமைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நாட்டின் நுழைவுப் புள்ளிகளில் பாதுகாப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

இன்று இங்குள்ள இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோ செரி அன்வர் இப்ராஹிமுக்கு ஒரு மணி நேர சந்திப்புக்கு அனுமதி அளித்த பின்னர் மன்னர் இவ்வாறு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *