ஹெனிக்கனின் இலவசப் பயிற்சி தொழில்துறைக்கு அவசியம்! – பிரவினா அசோகன்!
- Tamil Malar (Reporter)
- 03 May, 2026
மே 3,
Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER ஏற்பாட்டில் மலர் டெய்லி ஒத்துழைப்பில் வழங்கப்படும் தொழில்முனைவோருக்கான இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கம் தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்து மேலும் பல தகவல்களை வழங்குவதுடன் தற்காலத்திற்கு மிகவும் அவசியமானது என Beisik Bakeshop பேக்கரி நிறுவனத்தில் உரிமையாளர் பிரவீனா அசோகன் தெரிவித்தார்.
Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழில்முனைவோர்களுக்கு இலவசமாக டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் Beisik Bakeshop பேக்கரி நிறுவனத்தில் உரிமையாளர் பிரவீனா அசோகனும் பெற்றுள்ளார்.
அடிப்படையில் யோகா பயிற்சியாளரான பிரவீனா அவர் தயாரிக்கும் குக்கீஸ்களிலும் கேக்குகளும் ஆரோக்கியத்தைப் பாதிக்காத வகையில் இருப்பதையும் அவர் உறுப்படுத்தியுள்ளார். சுக்மா ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்ற வீரரான பிரவீனா தற்போது சமூக வலைத்தலங்களின் மூலம் ஆரோக்கியமான கேக்குகளையும் இனிப்புப் பண்டங்களையும் விற்பனை செய்து வருகிறார்.
தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் மேலும் அதிகமானத் தகவல்களைப் பெறவும் Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER வழங்கும் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கம் வழிவகுக்கும் என தாம் நம்புவதாக Beisik Bakeshop பேக்கரி நிறுவனத்தில் உரிமையாளர் பிரவீனா அசோகன் நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



