ஹெனிக்கனின் இலவசப் பயிற்சிக் கூடுதல் தகவல்களை வழங்கும்! - மாரி கலையரசன் நம்பிக்கை!
- Writer Tamil
- 03 May, 2026
மே 3,
Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER ஏற்பாட்டில் மலர் டெய்லி ஒத்துழைப்பில் வழங்கப்படும் தொழில்முனைவோருக்கான இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கம் தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்து மேலும் பல தகவல்களை வழங்கும் என Chakkra Redesign Enterprise நிறுவனத்தில் உரிமையாளர் மாரி கலையரசன் நம்பிக்கை தெரிவித்தார்.
Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழில்முனைவோர்களுக்கு
இலவசமாக டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் குறித்து
பயிற்சி வழங்கவுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் Chakkra Redesign Enterprise நிறுவனத்தைக் கடந்த 2018 முதல் நடத்தி வரும் மாரி கலையரசனும்
பெற்றுள்ளார்.
வீடுகள், அலுவலகங்கள்,
கடைகள் போன்றவற்றில் உள்கட்டமைப்பு அலங்கார வடிவமைப்புகளை நிறுவனம் Chakkra Redesign
Enterprise மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். கோலாலம்பூர் சிலாங்கூர் மட்டுமின்றி
இதர மாநிலங்களிலும் தமது நிறுவனம் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு
கொண்டு செல்லவும் மேலும் அதிகமானத் தகவல்களைப் பெறவும் Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER வழங்கும் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கம் வழிவகுக்கும் என
தாம் நம்புவதாக Chakkra Redesign Enterprise நிறுவனத்தில் உரிமையாளர் மாரி கலையரசன் நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



