ஹெனிக்கனின் இலவசப் பயிற்சி தொழிலை மேம்படுத்த உதவும்! - சந்திரிகா!

top-news

ஏப்ரல் 29,

Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER ஏற்பாட்டில் மலர் டெய்லி ஒத்துழைப்பில் வழங்கப்படும் தொழில்முனைவோருக்கான இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கம் தன்னை போன்ற சிறுதொழில் வணிகர்கள் தொழில்துறை மேம்படுவதற்குப் பயனாகவும் கூடுதல் நுணுக்கங்களையும் அறியும் வாய்ப்பாக இருக்கும் என சந்திரிகா நாயுடு ராமையா தெரிவித்தார்.

Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழில்முனைவோர்களுக்கு இலவசமாக டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பூச்சோங்கைச் சேர்ந்த சந்திரிகா நாயுடு ராமையாவும் பெற்றுள்ளார்.  கடந்த 11 ஆண்டுகளாக HEAVENLY BAKERS CAKES நிறுவனத்தை நடத்தி வரும் சந்திரிகா நாயுடு ராமையா தனது நண்பர்கள் உறவினர் என மட்டுமல்லாது இயங்கலையில் பெறப்படும் ஆர்டர்களின் மூலமாகவும் தொடர்ந்து வணிகத்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். 

சமூகவலைத்தலங்களில் பிரபலமான கேக்குகளைத் தயாரித்து விற்பனைக்கான தலமாகத் தாம் பயன்படுத்தி வருவதாகவும் கேக் தயாரிப்பதற்கான பயிற்சிகளையும் தாம் முறையாக NAVEM நிறுவனத்திடமிருந்து பெற்றதாகவும் சந்திரிகா தெரிவித்தார். தற்போது Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER ஏற்பாட்டில் மலர் டெய்லி ஒத்துழைப்பில் வழங்கப்படும் தொழில்முனைவோருக்கான இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கின் மூலமாகத் தனது கேக் தயாரிக்கும் வணிகத்தை மேலும் மேம்படுத்த முடியும் என சந்திரிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *