ஹெனிக்கனின் இலவசப் பயிற்சிதொழில் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக அமையும்! - குணாளன் பொன்னுசாமி!
- Writer Tamil
- 30 Apr, 2026
ஏப்ரல் 30
Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER ஏற்பாட்டில் மலர் டெய்லி ஒத்துழைப்பில் வழங்கப்படும் தொழில்முனைவோருக்கான இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கம் தொழில் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என தாம் நம்புவதாக PMG GLOBAL RESOURCES பாதுகாப்பு கருவிகளை பொருத்தும் நிறுவனத்தை நடத்தி வரும் ஷா ஆலமை சேர்ந்த குணாளன் பொன்னுசாமி தெரிவித்தார். Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழில்முனைவோர்களுக்கு இலவசமாக டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் PMG GLOBAL RESOURCES நிறுவனத்தை நடத்தி வரும் குணாளன் பொன்னுசாமியும் பெற்றுள்ளார்.
சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் முன்னனி பாதுகாப்பு நிறவனங்களில் ஒன்றான Safeguards security system நிறுவனத்தில் பணியாற்றியதன் அனுபவத்தைக் கொண்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக PMG GLOBAL RESOURCES நிறுவனத்தைத் தொடங்கியதாக குணாளன் பொன்னுசாமி தெரிவித்தார்.
அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து வகையிலானத் தொழில்நுட்பச் சாதனங்களையும் பொருத்தும் ஒரு தொழில் நிறுவனமாக PMG GLOBAL RESOURCES நிறுவனம் செயல்படுவதாக குணாளன் பொன்னுசாமி தெரிவித்தார். தற்போது Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER வழங்கும் இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கின் மூலமாகப் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த முடியும் என்பதால் தனது பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தையும் மேம்படுத்த முடியும் என குணாளன் பொன்னுசாமி தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



