ஹெனிக்கன் மார்கெட்டிங் நிறுவனம் இலவசமாகப் பயிற்சி வழங்குவது சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்!
- Tamil Malar (Reporter)
- 24 Apr, 2026
கோலாலம்பூர் ஏப் 24-
இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும். இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. எதிர்வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் நடைபெறவுள்ளன. இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி தமது தொழில் முன்னேற்றத்திற்கு ஒரு வழிகாட்டலாக அமையும் என இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட Syenthesis Leisure Builder நிறுவனத்தில் நிர்வாக பங்குதாரரான ரவாங்கைச் சேர்ந்த ஜனகன் சுப்ரமணியம் கூறுகிறார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த கட்டுமான நிறுவனத்தை தாம் நடத்தி வருவதாக ஜனகன் கூறினார். தமது கட்டுமான நிறுவனம் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை புதுப்பித்தல் மற்றும் பல்வேறு கட்டுமான தொழில்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். தற்போது சைபர் ஜெயாவில் ஒரு அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகளில் தமது நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார். மேலும் கேமரன் மலை பிரின்சாங்கில் ஒரு பட்ஜெட் ஹோட்டலை புதுப்பிக்கும் பணியில் தமது நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.
12 தொழிலாளர்களைக் கொண்டு இந்த கட்டுமான நிறுவனத்தை சிறப்பாக தாம் நடத்தி வருவதாக அவர் பெருமிதம் கொண்டார். இந்தக் கட்டுமான நிறுவனத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நடத்தும் இந்த பயிற்சி குறித்து சமூக வலைதள செய்தி ஒன்றில் தமக்கு தெரிய வந்ததாக அவர் சொன்னார். செயற்கை நுண்ணறிவு(AI) கருவிகளை பயன்படுத்தி தமது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்லலாம் என்பதை தெரிந்து கொள்ள இந்த பயிற்சிக்கு தான் விண்ணப்பம் செய்ததாக அவர் குறிப்பிட்டார். இந்த பயிற்சியில் கலந்து பயன்பெற தாம் பெரிதும் எதிர் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



