Tiger Empower- மலர் டெய்லி நிறுவனத்தின் AI பயிற்சி நிறைவு விழா!
- Tamil Malar (Reporter)
- 25 May, 2026
மே 25,
ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி நடத்தப்பட்ட ஒரு இலவச பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது. ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் ஆதரவில் இந்த இலவச பயிற்சி 5 நாட்கள் தலைநகரில் உள்ள MAVEM அலுவலகத்தில் நடைபெற்றது. சிறு குறுந் தொழில் முனைவோருக்கான இந்த பயிற்சியில் தேர்வு செய்யப்பட்ட 10 பேர் கலந்து கொண்டனர்.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டு
திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இப்பயிற்சி பயிலரங்கின் நிறைவு விழா கோலாலம்பூரில்
GRAND PACIFIC அரங்கத்தில் நடைபெற்றது. முன்னாள் துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி
கந்தசாமிஹெய்னிகியன் மார்க்கெட்டிங் வர்த்தக பிரிவின் நிர்வாகி ஜெனிபர் தெனாட் தமிழ்
மலர் டெய்லி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ பெரியசாமி அகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இப்பயிலரங்கின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட
3 வணிகர்களுக்குச் ரொக்கப் பணத்துடன் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. முதல்
நிலையில் Heavenly Bakers நிறுவன உரிமையாளர் சந்திரிகா நாயுடு தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம்
நிலையில் Synthesis Leisure cafe நிறுவனத்தின் உரிமையாளர் ரோகினி சிவலிங்கம் தேர்வு செய்யப்பட்ட நிலையில்
மூன்றாம் நிலையில் நவீன தொழில்நுட்ப விவசாயியான ரவீந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
நவீனத் தொழில் உக்திகளைப் பயன்படுத்தி தங்களது
வணிகத்தை நாம் மேம்படுத்த இம்மாதிரியான டிஜிட்டல்
மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கம் நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது என இப்பயிலரங்கின்
ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
ஹெய்னிகியன் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் இந்த சமூக மேம்பாட்டு திட்டத்தை தாங்கள் மிகவும் பாராட்டுவதாக மலர் டெய்லி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டத்தோ எஸ்எம் பெரியசாமி கூறினார். மலர் டெய்லி நிறுவனம் ஹெய்னிகியின் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு Fastech Security Malaysia நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ அழகேசு, அந்நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ ஷாமிளா, டத்தோ மகேந்திரன், தொழிலதிபர் சிவா மற்றும் டத்தோ பஞ்ச மூர்த்தி சிறப்பு வருகை புரிந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



