மருத்துவர்கள் வெளியேறியதை சுகாதார அமைச்சு சாதாரணமான கருதவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 23-

கடந்த ஐந்து ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, பொதுச் சேவைத் துறையிலிருந்து வெளியேறியிருக்கும் சம்பவத்தை, சுகாதார அமைச்சு ஒரு சாதாரணமான விசயமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று, அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கீப்ளி அஹ்மாட் கூறியுள்ளார்.

நிரந்தரப் பதவியில் அமர்வதற்காக, பொதுச் சேவைத் துறையிலிருந்து தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ள 3,200 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளும் அவர்களில் அடங்குவர்.சில மருத்துவர்கள் மேற்கல்வி கற்பதற்காக அவ்வாறு செய்திருந்தாலும், அவர்கள் தொடர்ந்து பொதுச் சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதில் இன்னமும் பங்களித்து வருவதாக, டாக்டர் சுல்கீப்ளி தெரிவித்தார்.

"ஊழியர் பற்றாக்குறையை சுகாதார அமைச்சு எதிர்நோக்கி இருப்பதை நான் ஒப்புக் கொள்வதுடன் முழுமையாக அறிந்தும் வைத்திருக்கின்றேன். சுகாதார அமைச்சின் சில ஊழியர்கள், தங்களின் இதர சகாக்களைக் காட்டிலும் கூடுதல் வேலைப் பளுவை சந்தித்துவர வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இத்தகைய சூழலை எங்களால் மறுக்க முடியாது.

“எனினும், இன்றைய காலகட்டத்தில் தோன்றும் அனைத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், இப்போது சுகாதார அமைச்சின் ஊழியர்கள் சந்தித்து வரும் அனைத்து விவகாரங்களும், சுகாதார அமைச்சர் எனும் முறையில் எனது இந்த இரண்டாவது தவணைக் காலத்தில் நிவர்த்தி செய்யப்படுவதை நான் உறுதிப்படுத்துவேன்" என்று,நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது முகநூலில் பதிவிட்ட ஒரு பதிவில் டாக்டர் சுல்கீப்ளி குறிப்பிட்டார்.

மருத்துவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு பொதுச் சேவைத்துறையிலிருந்து வெளியேறும் விவகாரத்தை கையாள்வதில், சுகாதார அமைச்சு எத்தகைய திட்டங்களையும் வியூகங்களையும் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள தாம் விரும்புவதாக, சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ரஃபிடா அப்துல்லா கூறியிருப்பது குறித்து அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இதுபோன்ற நிலை அனைத்து தொழில்துறைகளிலும் ஒரு சவாலாக இருந்து வருவதால், மருத்துவ அதிகாரிகள் சுகாதார அமைச்சிலிருந்து வெளியேறி, தனியார் துறைகளுக்குச் செல்வதை அமைச்சினால் தடுக்க முடியாது என்று டாக்டர் சுல்கீப்ளி கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *