டி.வி. நேரலையின்போது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் – சம்பவங்களில் 3 பேர் பலி
- Surendran Sumdraraj
- 16 Sep, 2026
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சாலை விபத்து ஒன்றை நேரலையில் ஒளிபரப்புவதற்காகச் சென்ற தொலைக்காட்சி நிறுவன ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸின் சான் பெர்னாண்டோ வேலி பகுதியில் உள்ள நார்ட்ஹாப் ஸ்ட்ரீட் அருகே மெட்ரோ பஸ் ஒன்றும், சொகுசு காரும் மோதியதில் கடும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்து தொடர்பான காட்சிகளைப் பதிவு செய்து நேரலையில் ஒளிபரப்ப தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் ஹெலிகாப்டர் சம்பவ இடத்தின் மேலே பறந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு கட்டிடங்களுக்கு இடையே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டர் விழுந்ததில் தரையில் இருந்த ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இரு சம்பவங்களிலும் மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



