பகாங்கில் ஹெலிகாப்டர் விபத்து! ஒருவர் பலி! இருவர் படுகாயம்!

top-news

பிப்ரவரி 6,

இன்று காலை பகாங் பெந்தோங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் விமானியும் மற்றொருவரும் படுகாயம் அடைந்தனர். இன்று காலை 10.39 மணியளவில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் ஹெலிகாப்டரின் மின்விசிறி மோதியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஹெலிகாப்டரின் விமானியும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரும் காயமடைந்ததாகப் பெந்தோங் மாவட்டக் காவல் ஆணையர் Zaiham Mohd Kahar தெரிவித்தார்.

விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீயில் கருகியதாகவும் விபத்துக்கானக் காரணத்தை தேசிய விமானப் போக்குவரத்து ஆணையமான CAAM ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Sebuah helikopter terhempas di Bentong Pahang dan mengakibatkan seorang maut dan dua cedera termasuk juruterbang dan jurutera warga Indonesia. Helikopter terbakar sepenuhnya dan CAAM sedang menyiasat punca kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *