ஹெனிக்கனின் இலவசப் பயிற்சி நவீனமயத் தகவல்களைப் பெற உதவும்! – ராஜேஸ்வரி நம்பிக்கை!

top-news

மே 4,

Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER ஏற்பாட்டில் மலர் டெய்லி ஒத்துழைப்பில் வழங்கப்படும் தொழில்முனைவோருக்கான இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கம் தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் மூலம் நவீனமயமானத் தகவல்களைப் பெற வழிவகுக்கும் என Infinate Training & Consultancy பயிற்சி நிறுவனத்தை நடத்தி வரும் ராஜேஸ்வரி தெரிவித்தார். 

Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER இன்று மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழில்முனைவோர்களுக்கு இலவசமாக டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பத்துமலையைச் சேர்ந்த ராஜேஸ்வரியும் பெற்றுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இடங்களில் சவால்களை எதிர்நோக்கும் பணியாளர்களுக்கு பயிற்சியை தாம் வழங்கி வருவதாகவும் மன அழுத்தத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு ஏற்ப திட்டங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதால் Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER வழங்கும் செயற்கை நுண்ணறிவு பயிலரங்கின் மூலம் மேலும் திட்டங்களை மேலும் சிறப்பாக மேம்படுத்துவதுடன் நவீனத்துவத்துடனும் தனது பயிற்சிகளைத் தாம் வழங்க முடியும் என Infinate Training & Consultancy பயிற்சி நிறுவனத்தை நடத்தி வரும் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *