Tiger Empower- மலர் டெய்லி நிறுவனத்தின் AI பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது

top-news

கோலாலம்பூர் மே 9

ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower  மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி நடத்தப்பட்ட ஒரு இலவச பயிற்சி வெற்றிகரமாக நடைபெற்றது.  ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் ஆதரவில் இந்த இலவச பயிற்சி 5  நாட்கள் தலைநகரில் உள்ள MAVEM அலுவலகத்தில் நடைபெற்றது.  சிறு குறுந் தொழில் முனைவோருக்கான இந்த பயிற்சியில்  தேர்வு செய்யப்பட்ட 10 பேர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சியில் பங்கு பெற்றோரின் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பிரசவிக்கப்பட்டது.  தற்போது தாங்கள் செய்து வரும் தொழில் மற்றும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இவர்கள் தங்களின் பேட்டி விரிவாக விமர்சித்துள்ளனர். இரண்டு நாள் நேர்முகமாகவும் மற்றும் மூன்று நாள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில் கலந்து கொண்டதால் தங்களுக்கு கிடைத்த அனுபவம் மற்றும் நன்மைகள் குறித்து  விளக்கம் தந்தனர். 

ஒரு தனியார் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த பயிற்சியை அனுஷா வெற்றிகரமாக வழி நடத்தினார்.  அடுத்த கட்டமாக இந்த பயிற்சியில் பங்கு பெற்ற 10 பேரில் 3 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவர்.  இந்த மூவருக்கு போட்காஸ்ட்-ல்  (Podcast)  பேட்டியளிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *