ஹெனிக்கனின் இலவசப் பயிற்சி தொழில்துறை மாற்றத்திற்கு உதவும் –பிரவீனா சந்திர பாஸ்கரன்!

top-news

மே 4,

Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER ஏற்பாட்டில் மலர் டெய்லி ஒத்துழைப்பில் வழங்கப்படும் தொழில்முனைவோருக்கான இயங்கலை செயற்கை நுண்ணறிவு பயிற்சி பயிலரங்கம் தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் மூலம் சிறந்த மாற்றத்திற்கு வழிவகுக்கும் என Rasagali  நிறுவனத்தில் உரிமையாளர் பிரவீனா சந்திர பாஸ்கரன் தெரிவித்தார்.
Heniken மார்கெட்டிங்கின் TIGER EMPOWER எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொழில்முனைவோர்களுக்கு இலவசமாக டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கவுள்ளது. இந்த அரிய வாய்ப்பை ஈப்போவைச் சேர்ந்த B Rasagali  நிறுவனத்தில் உரிமையாளர் பிரவீனா சந்திர பாஸ்கரனும் பெற்றுள்ளார்.

தேநீர் தூள், காப்பி தூள், என்பனவற்றைக் கடந்த ஆண்டு முதல் சுயமாகத் தயாரித்து விற்பனை செய்து வரும் தனக்கு இது போன்ற இலவச வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது பெருமையாக இருப்பதாகவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மேலும் பல்வேறு நுணுக்கங்களில் தனது தொழிலாற்றலை மேம்படுத்த இந்த பயிலரங்கம் அமையும் என தாம் நம்புவதாக Rasagali  நிறுவனத்தில் உரிமையாளர் பிரவீனா சந்திர பாஸ்கரன் தெரிவித்தார். 

தற்போது அரசு நிகழ்ச்சிகளுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து உணவுகளையும் சுயமாகத் தயாரிக்கும் தேநீர், காப்பிகளை வழங்கி வருவதாகவும் தானும் தனது தாயாரும் தொழிலை விரிவுப்படுத்த முயற்சித்து வருவதாகவும் விரைவில் சுயமாகக் கடை திறைக்கவிருப்பதாகவும் Rasagali  நிறுவனத்தில் உரிமையாளர் பிரவீனா சந்திர பாஸ்கரன் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *