காவல்துறையினர் என் ஆடைகளைக் கழற்ற கட்டாயப்படுத்தினர்! கோயில் உடைப்பு ஆசாமி சொல்லும் குற்றச்சாட்டு உண்மையா? நாடாளுமன்றத்தில் விளக்கம்

top-news

கோலாலம்பூர், அக் 28: காவல் நிலையத்தில் தம்மை நிர்வாணமாக்கக் கட்டாயப்படுத்தியதாகக் கூறிய சமூக ஆர்வலர் தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் தொடர்பாக, சுயாதீன காவல்துறை நடத்தை ஆணையத்துக்கு இதுவரை புகார் எதுவும் கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 25ஆம் தேதி நிலவரப்படி, தடுப்புக் காவலில் தாம் கடுமையாக நடத்தப்பட்டதாகவும், மற்ற கைதிகள் முன்னிலையில் ஆடைகளைக் கழற்ற உத்தரவிடப்பட்டதாகவும் தமிம் அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆணையத்துக்குப் புகார் கிடைக்கவில்லை என்று அவர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டால், சுயாதீன காவல்துறை நடத்தை ஆணையச் சட்டம் 2022-இன் 25ஆவது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம், தாமும் மேலும் மூவரும் காவல் தடுப்புக் காவலில் விலங்குகளைப் போல நடத்தப்பட்டதாகவும், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிர்வாணமாக நிற்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தமிம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தாமான் ராவாங் பெர்டானாவில் உள்ள ஒரு கோவிலில் நிலத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்