ஒட்டுண்ணிகள் பாரிசானை விழுங்கும் அபாயம் உள்ளது! – பாரிசானுக்கு அமிருதின் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 24: எதிர்க்கட்சிக் கூட்டணியுடன் பாரிசான் நேஷனல் தொடர்ந்து நெருங்கிய உறவைப் பேணினால், அது பெரிகாத்தான் நேஷனலின் ஆதிக்கத்திற்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் இயக்குனர் அமிருதின் ஷாரி தெரிவித்துள்ளார்.

திரெங்கானு, கிளந்தான், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்கள் ஏறக்குறைய முழுமையாக பெரிகாத்தான் நேஷனலின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனாலும் இந்த மாநிலங்களின் மக்கள், பக்காத்தான் ஹரப்பான் ஆளும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் உள்ள சிறந்த வாழ்க்கைத்தரம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக தொடர்ந்து வெளியேறி வருகின்றனர் என்று அமிருதின் கூறினார்.

மலாய் ஒற்றுமையால் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தால், பாஸ் தலைமையிலான இந்த மாநிலங்கள் ஏற்கனவே மிகவும் சிறந்த வாழ்க்கைத்தரத்தையும் அதிக வருமானத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பாரிசான் நேஷனல் இந்த யதார்த்தத்தை உணர வேண்டும். ஏனெனில் அது விரைவில் பெரிகாத்தான் நேஷனலால் விழுங்கப்படும். 'பெரிகாத்தான் பாரிசான் நேஷனல்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலமே, பாரிசான் நேஷனலை ஆதிக்கம் செலுத்த பெரிகாத்தான் நேஷனல் விரும்புவதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெளிவாகத் தெரிகின்றன  என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் தேர்தலின் போது இரு கூட்டணிகளின் ஆதரவாளர்களிடையே குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, பெரிகாத்தான் பாரிசான் நேஷனல் என்ற பெயரை பார்ட்டி வவாசான் நெகாரா தலைவர் ஹம்சா ஜைனுதின் முன்மொழிந்தார், இருப்பினும் அந்த முன்மொழிவு இன்னும் முறையாக விவாதிக்கப்படவில்லை.

அமிருதின், பெரிகாத்தான் – பாரிசான் ஒத்துழைப்பை பக்காத்தான் ஹராப்பான் ஒற்றுமை அரசாங்கத்துடன் ஒப்பிட்டு, நம்பிக்கையின் அடிப்படையிலான ஒரு கூட்டணியால் மக்களுக்குப் பலன்களை வழங்க முடியும் என்பதை பக்காத்தான் ஹரப்பான் காட்டியுள்ளது என்று கூறினார்.

பக்காத்தான் ஹரப்பானின் செயல்திறனும் அர்ப்பணிப்பும் வெறும் வாக்குறுதிகள் அல்ல. இவை சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் மக்களும், இப்போது கூட்டாட்சி அளவிலும் அனுபவித்து வரும் சாதனைகள், என்று அவர் கூறினார்.

பாஸ் மற்றும் அம்னோ இடையேயான ஒற்றுமைப் பேச்சு, கடந்தகாலத் தோல்வியுற்ற முயற்சிகளின் மறுபதிப்பு என்று அவர் நிராகரித்தார். பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், இப்போது "அம்னோ ஒற்றுமையை" ஊக்குவித்த போதிலும், அம்னோவை "ஜாஹிலியா" (அறியாமை) என்று முத்திரை குத்தியது உட்பட, கடந்தகால விமர்சனங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

1972, 2008 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் PAS-BN அல்லது PN-BN கூட்டணிகள் மேற்கொண்ட மூன்று ஒத்துழைப்பு முயற்சிகள் தோல்வியடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

சில அரசியல் ஒட்டுண்ணிகளின் செயல்கள் கொள்கைப் பற்றாக்குறை, கண்ணியம் மற்றும் அதிகாரத்தின் மீதான அதீத தாகத்தைக் காட்டுவதால், இந்த முயற்சிகள் படுமோசமாகத் தோல்வியடைந்தன, மீண்டும் தோல்வியடையும்  என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *