ரஃபிஸியை எதிர்த்து தெங்கு ஜஃப்ருலா? - தெங்கு ஜஃப்ருல் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், மே 27: அடுத்த பொதுத் தேர்தலில் (GE16) பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் ரஃபிஸி ராம்லியை எதிர்த்துப் போட்டியிட, PKR கட்சி சார்பில் வேட்பாளரக்ப் போட்டியிடத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பிரதமர் அன்வர் இப்ராஹிமின் மூத்த அரசியல் ஆலோசகரான தெங்கு ஜஃப்ருல், இது PKR கட்சியின் மத்திய தலைமை அதன் வேட்பாளர் குறித்து எடுக்கும் முடிவைப் பொறுத்தது என்று கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

வாய்ப்பு வழங்கப்பட்டால், நான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடத் தயார். முடிவெடுப்பது கட்சியின் கையில்தான் உள்ளது என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

ஆயினும், பண்டானில் தனது சமீபத்திய வருகை அங்குள்ள மக்களுக்குச் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும், தேர்தலில் ரஃபிஸியை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கவில்லை என்றும் தெங்கு ஜஃப்ருல் கூறினார்.

முன்னாள் துணைத் தலைவரும், தற்போது பார்ட்டி பெர்சாமா மலேசியாவிற்கு மாறியவருமான ரஃபிசியை எதிர்த்துப் போட்டியிட, ப PKR கட்சி தெங்கு சஃப்ருலை வேட்பாளராக நிறுத்தக்கூடும் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *