SPM - STPM மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில் வரம்பு இல்லை! தகுதி இருந்தால் தாராளமாக பல்கலைக்கழகங்களில் சேரலாம்

top-news
FREE WEBSITE AD

கோத்த கினபாலு, ஏப் 20: SPM அல்லது STPM சான்றிதழ்களுடன் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படும் எண்ணிக்கைக்கு நிலையான வரம்பு எதுவும் இல்லை என்று உயர்கல்வி அமைச்சர் ஸம்ப்ரி அப்துல் காதிர் கூறினார். 

மாறாக, பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு அவர்களின் ஆர்வம் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் தங்கள் படிப்பைத் தொடர சாத்தியமான அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும் என்று கூறினார்.

பரந்த அளவிலான அணுகலை வழங்குவதால், பல்கலைக்கழக சேர்க்கைக்கு  குறிப்பிட்ட இலக்கு எதுவும் இல்லை. தேவையான தகுதிகளைக் கொண்டவர்கள் தங்கள் படிப்பைத் தொடர ஆர்வமாக இருக்கும் வரை, அவர்கள் அதற்கேற்ப சேர்க்கப்படுவது  உறுதி செய்யப்படும் என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த ஆண்டு சுமார் 100,000 SPM மற்றும் 75,000 STPM பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி  பயிற்சி போன்ற திறன் சார்ந்த துறைகளிலும் தங்கள் படிப்பைத் தொடர வாய்ப்பு பெறுவார்கள் என்று ஸம்ப்ரி கூறினார்.

ஜோம் மாசுக் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக நுழைவுத் திருவிழாவில் கலந்துகொண்ட பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *