பெர்சாத்துவுக்கு இடமில்லை; அது விலகிவிட்டது! - ஹாடி அவாங்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 7: புதிய அரசியல் கூட்டணியை அமைக்கும் திட்டங்களை அறிவித்ததைத் தொடர்ந்து, பெர்சாத்து கட்சி தானாகவே பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து விலகிவிட்டது என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார்.

பெரிகாத்தான் நேஷனல் அரசியலமைப்பின்படி, வேறு எந்தக் கூட்டணியில் சேரவோ அல்லது புதிய கூட்டணியை உருவாக்கவோ விரும்பும் கட்சி, தானாகவே தனது உறுப்பினர் பதவியை இழந்துவிடும் என்று ஹாடி குற்றம் சாட்டினார்.

அவர்கள் (பெர்சத்து) மற்றொரு 'அணியை' உருவாக்க விரும்புவதாக ஏற்கனவே கூறிவிட்டனர். அவர்களே அதை அறிவித்துவிட்டனர். அவர்கள் தானாகவே வெளியேறிவிட்டனர் என்று இன்று திரெங்கானுவில் உள்ள மஸ்ஜித் ருசிலாவில் சொற்பொழிவாற்றிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

பெர்சாத்து இனி கூட்டணியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கையை பெரிகாத்தான் வெளியிடுமா என்று கேட்டபோது, ​​அது தேவையற்றது என்று ஹாடி கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *