சீனப் புத்தாண்டு - தைப்பூசத்திற்கு மலாய்காரர்கள் செல்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை! - அன்வார்
- Shan Siva
- 31 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 31: மலேசியர்கள் தங்கள் சொந்த இனம் அல்லது
பிராந்தியத்தை ஆதரிப்பதை விட, தேசிய
வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அதிக ஒற்றுமையை
வளர்ப்பதில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் எழும் பிரச்சினைகளால் திசைதிருப்பப்படக்கூடாது. நமது நாடு பல்வேறு பிராந்தியங்கள்
மற்றும் மாநிலங்களைக் கொண்ட பல இன, பல மதங்களைக் கொண்ட
நாடு. இங்கே ஒரு சிறிய பிரிவினர் தங்கள் இனம் அல்லது பகுதி
மற்றும் பிராந்தியத்திற்காக ஹீரோக்களாக இருக்க விரும்புவதால் இதுபோன்ற
‘பிரச்சினைகள்’ பெரும்பாலும் எழுகின்றன,” என்று அவர் கூறினார்.
சீனப் புத்தாண்டு
அல்லது தைப்பூச கொண்டாட்டங்களுக்கு மலாய்க்காரர்கள் செல்வதில் எனக்கு எந்தப்
பிரச்சினையும் இல்லை. பல ஆண்டுகளாக, இது ஒருபோதும் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. நீண்டகால மரபுகள் ஏன்
திடீரென்று ஒரு பிரச்சினையாக மாற வேண்டும்? என்று அவர் கேள்வி
எழுப்பினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



