22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் மீண்டும் குடும்பத்தினரைச் சந்தித்த நெகிழ்ச்சி!
- Shan Siva
- 23 Jul, 2026
சுபாங் ஜெயா, ஜூலை 23: 2004-ல் இந்தோனேசியாவுக்குப் பயணம் செய்த
பிறகு காணாமல் போன மரியம் முகமது நசேரி, இறுதியாக வீடு திரும்பியதை அடுத்து, ஒரு குடும்பத்தின் 22 ஆண்டுகாலக் காத்திருப்பு நேற்று
முடிவுக்கு வந்தது.
RTM-இன் தகவலின்படி, மரியம் நேற்று இரவு 10 மணிக்கு, சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். 2004-ல் மரியம் தனது மகளுடன் இந்தோனேசியாவுக்குப் பயணம் செய்ததாகவும், அதன் பிறகு குடும்பத்தினருக்கு அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இருப்பினும், இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் உள்ள பரந்த நிலப்பரப்பு மற்றும் சிதறிய குடியிருப்புகள் காரணமாக, அங்கு அவரைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேடலுக்கு
உதவுவதற்காக, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினோம் மற்றும் உள்ளூர் மக்களுடன் தொடர்புகளை
ஏற்படுத்தினோம் என்று தெரிவித்தனர்.
தேடுதல் மற்றும் தாயகம் திரும்பும் முயற்சியில் மலேசிய நல அமைப்பு (பெக்மாஸ்), விஸ்மா புத்ரா, குடிநுழைவுத் துறை, தேசியப் பதிவுத் துறை, இந்தோனேசியாவில் உள்ள மலேசியத் தூதரகம் மற்றும் புளோரஸில் உள்ள உள்ளூர் சமூகம் ஆகியவை ஈடுபட்டன.
ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம் மரியமின் பயண ஆவணங்களை முடிக்கும் வரை, அவர் புளோரஸில் தற்காலிகப் பராமரிப்பில் வைக்கப்பட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



