குனோங் பத்து பூத்தேவில் மே 23 காணாமல்போன மலயேறியைத் தேடும் பணி தீவிரம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 29: பேராக் மாநிலம், தாப்பாவில் உள்ள குனோங் பத்து புத்தே  மலையில் மே 23 அன்று மலையேறும்போது காணாமல் போன 49 வயதான மலையேறும் வீராங்கனை ஜஸ்லிண்டா சலுதீனைத் தேடும் பணி, 72 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்த நிலையில், தற்போது ஒரு நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் பல பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர் உணவு மற்றும் தண்ணீரைத் தேடிச் சென்றிருக்கக்கூடிய இடங்களுக்கும் தேடுதல் பகுதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) இயக்குநர் சயானி சைடன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் தண்ணீரைத் தேடிச் சென்றிருக்கக்கூடிய சுங்கை ஆயர் பூச்சோக் ஆற்றங்கரைப் பகுதியில் தற்போது தேடுதல் பணி கவனம் செலுத்தும்.

பாதிக்கப்பட்டவரின் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு, தேடுதல் தொடரும் வேளையில் அவரால் உயிர் பிழைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினர்.

அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு நீர் ஆதாரத்தைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார் என்றும், குனோங் பத்து பூத்தேக்கு அருகில் உள்ள  சுங்கை ஆயர் பூச்சோக்கை  நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம், என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *