தாயைக் கொன்று 3 வருடங்களாக ஐஸ் பெட்டியில் வைத்து வந்த மகன் கைது! பிரிக்பீல்ட்ஸில் பயங்கரம்!

top-news

(இரா.கோபி)

பிரிக்பீல்ட்ஸ், நவம்பர் 12: பிரிக்பீல்ட்ஸ், ஜலான் ஊஜாங், அபு 6, தாமான் ஓ யூ ஜி யில் உள்ள ஒரு வீட்டில் தனது தாயைக் கடந்த 2021 ஆம் ஆண்டு அடித்துக் கொன்று, பின்னர் தாயின் உடலை வீட்டில் இருந்த ஐஸ் பெட்டியில் வைத்து ஓர் ஆடவர் வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், தற்போது ஆதரவும், வாழ்க்கையை நடத்துவதற்கான போதிய வசதியும் இல்லாத சூழலில், சம்பந்தப்பட்ட ஆடவரே ஒரு முடிவுக்கு வந்து காவல்துறைக்குப் போன் செய்து விவரத்தைத் தெரிவித்துள்ளார்.

விவரம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மூன்று வருடங்களாக ஐஸ் பெட்டியிகல் இருந்த 80 வயது மாதுவின் உடலை மீட்டனர். இதனை அடுத்து சடலத்தை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, அவ்வாடவரையும் போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் அவ்வட்டாரத்தில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்