அமைச்சர் பதவி கிடைக்குதோ இல்லையோ மக்கள் சேவையே எங்கள் இலக்கு! - ம.இ.கா
- Shan Siva
- 01 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 1: தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சில் பதவி கிடைத்தாலோ அல்லது கிடைக்காவிட்டாலோ, இந்திய சமூகத்திற்கான சேவையை ம இ கா முழு நேர்மையுடனும், உறுதியுடனும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று ம இகா தெரிவித்துள்ளது. கட்சியின் போராட்ட இலக்கு அரசியல் பதவிகளை விட மேன்மையானது என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிகாத்தான் நேஷனல் (PN) தலைவர் பதவியில் இருந்து பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் விலகியதையடுத்து, ம.இ.கா மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அம்னோ கட்சியால் நியாயமாக நடத்தப்படவில்லை எனக் கூறிய ம இகா, பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியை விட்டு விலகி எதிர்க்கட்சியில் இணையக்கூடும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதோடு ஒற்றுமை அரசாங்கத்தில் ம இ கா புறக்கணிக்கப்பட்டதாகவும், ‘அழைக்கப்படாத விருந்தினர்’ போல நடத்தப்படுவதாகவும் ம இகாதரப்பில் குறாம் சாட்டபட்டது. மேலும், அமைச்சுப் பதவிகள் அல்லது அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களில் (GLC) எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை என்பதிலும் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற ம இ கா ஆண்டு பொதுக்கூட்டத்தில், BN-ல் தொடர வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்ற முடிவை கட்சித் தலைவர் மற்றும் மத்திய செயற்குழு (CWC)-க்கு ஒப்படைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்று, FMT தளத்தில் வெளியான வாசகர் கடிதம் ஒன்றில், சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பில் ம இ காவுக்குஇடமளிக்கப்படாததை சுட்டிக்காட்டி, கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதேபோல், முகைதீன் PN தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, ம இகாவின் நீண்டகால அரசியல் திசை குறித்தும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், கட்சியின் எதிர்காலத் திசையை நிர்ணயிக்க CWC கூட்டம் நடைபெறும் என்றும், இந்திய சமூகத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப கட்சி தந்திரங்கள் வகுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை, கருணை, நேர்மை ஆகிய அடிப்படைகளில் ம இ கா தொடர்ந்து செயல்படும். மக்களுக்கு கைக்கூடிய பலன்களை வழங்குவதே ம இ காவின் முதன்மை இலக்கு என்று குறிப்பிட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



