அவை எங்களைப் பிரிக்க முயற்சிக்கும் சக்திகள்! - ஹம்சா ஜைனுடின்
- Shan Siva
- 08 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 8: பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் ஆகியவற்றுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் யூகங்களை, பார்ட்டி வவாசான் நேகாரா தலைவர் டத்தோ செரி ஹம்சா ஜைனுடின் நிராகரித்துள்ளார். அத்தகைய கூற்றுக்கள் பிளவுகளை விதைக்கும் முயற்சிகள் என்றும் அவர் விவரித்துள்ளார்.
PN மற்றும் BN இடையே எந்தப் பிளவையும் தாம் காணவில்லை என்றுகுறிப்பிட்ட அவர், இப்போதுதான் நெகிரி செம்பிலானில் பதவியேற்றோம். இப்போதே பிளவு இருப்பதாக மக்கள் எப்படிச் சொல்ல முடியும்? என்று வினவினார்.
இவை எங்களைப் பிரிக்க முயற்சிக்கும் சக்திகள் என்று நேற்று நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் கருத்துக்களையும் கேட்டதாகவும், கட்சிகளுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஹம்சா கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



