அவர்கள் தங்கள் முடிவைச் சொல்லிவிட்டார்கள்; இனி போராட்டம்தான்! - முகைதீன் யாசின்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 17: அண்மையில் தங்களது உறவைத் துண்டித்துக்கொண்ட பாஸ் கட்சிக்கு எதிராக முழு வீச்சில் போராடத் தயாராக இருப்பதாக பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளும் பிரிந்து செல்வதை விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, ​​"அவர்கள் தங்கள் முடிவை எடுத்துவிட்டார்கள். இனி நாங்கள் எல்லா முனைகளிலும் போராடத் தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

நேற்று இரவு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உச்ச மன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர், முகைதீன் செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த வாரம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பெர்சாத்து கட்சி அதிகார வெறி கொண்டதாகவும், மலாய்-முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்காததாலும், தனது கட்சி அதனுடனான உறவைத் துண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறினார்.

வரவிருக்கும் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தல்களில் பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் கீழ் பெர்சாத்து போட்டியிடும் என்றும் முகைதீன் கூறினார்.

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியை நிறுவ நாங்கள் உதவியதால், இந்த நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக நிற்போம் என்று முகைதீன் தெரிவித்தார்.

மாநிலத் தேர்தல்களுக்கான கூட்டணியின் ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்க, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தார் இன்னும் ஒரு கூட்டத்தைக் கூட கூட்டவில்லை என்றும் முகைதீன் மேலும் கூறினார்.

முன்னதாக, எந்தவொரு இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் விவாதிக்க பெரிகாத்தான் நேஷனல் க கூடும் என்று அவர் கூறினார்.

அத்தகைய கூட்டங்கள் முக்கியமானவை. ஆனால்,  இப்போது அது ஒரு கட்டுப்பாடற்ற சூழலாக இருக்கிறது என்று அவர் தொகுதிப் பேச்சுவார்த்தைகளைக் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *