ராக்கியைக் கொன்றுவிட்டார்கள்; விசாரணை தேவை!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஜூலை 31: போர்ட் கிள்ளான், தாமான் தெலுக் காடோங் இண்டாவில், ஒரு செல்ல நாயை சித்திரவதை செய்து கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என விலங்குகள் நலக் குழு ஒன்று அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு, ராக்கி என்ற அந்த நாய் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என மலேசிய விலங்குகள் நல சங்கத்தின் தலைவர் கலைவாணன் ரவிச்சந்திரன் கூறினார்.

அதை விடுவிக்குமாறு அதன் உரிமையாளர் மன்றாடிய போதிலும், அந்த நபர்கள் ராக்கியின் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்றதால் அது இறந்துவிட்டதாக அவர் கூறினார்.

சம்பவ இடத்தில் கிள்ளான் நகர மன்றத்தின் இரண்டு அதிகாரிகளும் இருந்ததாக கலைவாணன் கூறினார்.

நடந்து கொண்டிருந்ததை நகர மன்ற அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை என்பதையும், அந்த குழு நகர மன்ற அதிகாரிகளின் அனுமதியோ அல்லது அறிவுறுத்தல்களோட செயல்பட்டதா என்பதையும் நகர மன்றம் விளக்க வேண்டும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.  

நாய் கயிற்றால் இழுத்துச் செல்லப்பட்டபோது, ​​ராக்கியின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்ததாக தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக கலைவாணன் கூறினார்.

இந்தச் சம்பவத்தின் காணொளிப் பதிவில், ராக்கியின் உரிமையாளர் நாயின் கழுத்தில் இருந்த சுருக்குக் கயிற்றை அகற்றுமாறும், தனது செல்லப்பிராணியைத் தன்னிடம் திருப்பித் தருமாறும் மீண்டும் மீண்டும் கெஞ்சுவது பதிவாகியிருந்தது.

மேலும், ராக்கியை அடையவிடாமல் மற்றொரு நபர் தன்னைத் தடுத்தபோது, ​​தனது வலது கையில் ஒரு மரக் குச்சியால் பலமுறை தாக்கப்பட்டதாக உரிமையாளர் குற்றம் சாட்டியதாகவும் கலைவாணன் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *