விமானப் பணிப்பெண்கள் HIJAB அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்! – பாஸ் கட்சியின் துணைத் தலைவர்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 7,


நாட்டின் முதன்மை விமான நிலையமான AIR ASIAவின் விமானப் பணிப்பெண்கள் HIJAB அணியலாம் என அந்நிறுவனம் அறிவித்ததை அடுத்து விமானப் பணிப் பெண்கள் HIJAB அணிவதையும் அப்படியான HIJAB பெண்களின் உறுப்புகளை மறைக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Datuk Seri Tuan Ibrahim Tuan Man கருத்து தெரிவித்தார். ஏர் ஆசிய வெளியிட்டுள்ள விமானப் பணிப் பெண்களுக்கான சீருடை கொள்கைகளைத் தாம் மதிப்பதாகவும் ஆனால் அது விமானப் பணிப்பெண்களின் விருப்பத்தில் அணியப்படுவதாக இருப்பதாகவும் Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார்.

தேசிய இஸ்லாமியக் கொள்கையை ஏர் ஆசிய நிறுவனம் உணர்ந்திருப்பதால் இந்த மாற்றம் இஸ்லாத்திற்குத் தேவையான மாற்றம் என Datuk Seri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார். ஏர் ஆசியாவின் இந்த அறிவிப்பு மற்ற விமான நிறுவனங்களுக்கும் ஒரு சமிஞ்சையாக இருக்க வேண்டும் என்றும் தேசிய இஸ்லாத்தை மதிக்கும் வகையில் இஸ்லாமியர்களின் கொள்கைக்கு ஏற்ப முக்கிய விமான நிறுவனங்களும் அதன் பணிப் பெண்களுக்கு HIJAB வழங்க வேண்டும் என பாஸ் கட்சியின் Datuk Seri Tuan Ibrahim Tuan Man வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *