12 ஆண்டுகளில் உலகையே அதிர வைத்த சீனாவின் மிரட்டல் தொழில்நுட்பம்!

top-news
FREE WEBSITE AD

தென் சீனக் கடல் - ஒரு காலத்தில் வெறும் நீல நிறப் பரப்பாகவும், ஆங்காங்கே சிதறிக் கிடந்த பவளப் பாறைகளாகவும் அறியப்பட்ட ஒரு பகுதி, இன்று உலக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.கடந்த 12 ஆண்டுகளில், டன் கணக்கிலான மணலைச் சுமந்து வந்து கடலில் கொட்டிய சீனா, யாரும் எதிர்பாராத வகையில் புதிய தீவுகளையே உருவாக்கியுள்ளது. இது வெறும் கட்டுமானப் பணி மட்டுமல்ல, உலகின் வரைபடத்தையே மாற்றி எழுதும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.




பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் பயணம் செய்த மாலுமிகள், இன்று அங்குள்ள மாற்றத்தைக் கண்டு மலைத்துப் போகிறார்கள். வெறும் கடல் நீராக இருந்த இடத்தில் இன்று 3 கிலோமீட்டர் நீளமுள்ள விமான ஓடுபாதைகள், ரேடார் கோபுரங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. 2013 முதல் 2016 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,200 ஹெக்டேர் புதிய நிலம் உருவாக்கப்பட்டது. இது ஏறத்தாழ 1,600 கால்பந்து மைதானங்களுக்கு சமமானது. மேலும்  சில ராணுவக் கோட்டைகளும் அமைந்துள்ளன.
பொறியாளர்கள் இதனை "நில மீட்பு" (Land Reclamation) என்கிறார்கள்.



தென் சீனக் கடல் என்பது உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதை. உலகின் ஒட்டுமொத்த கடல்வழி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகவே நடக்கிறது. மேலும், இதன் அடியில் கோடிக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பதாகக் கருதப்படுகிறது.

சீனா இந்தத் தீவுகளைத் தனது வரலாற்று உரிமை என்று கூறினாலும், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகள் தங்களது வாழ்வாதாரம் (மீன்பிடித் தொழில்) பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றன. "

இந்தச் செயற்கைத் தீவுகள் ஒருபுறம் சீனாவின் பலத்தைக் காட்டினாலும், மறுபுறம் அவை இயற்கையுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. கடல் அலைகள், உப்பு காற்று மற்றும் புயல்கள் இந்தக் கான்கிரீட் தளங்களை மெல்ல மெல்ல அரித்து வருகின்றன. இவற்றைத் தக்கவைத்துக் கொள்ள சீனா பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருக்கும். சர்வதேச நீதிமன்றங்கள் இந்த நில அபகரிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தாலும், சீனா அதை ஏற்க மறுத்து வருகிறது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *