அமெரிக்க ஒப்பந்தத்தால் சீனாவுக்கு பாதிப்பில்லை! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 1: அமெரிக்காவுடனான மலேசியாவின் வர்த்தக ஒப்பந்தம் சீனாவுடனான அதன் ஒத்துழைப்பைக் கட்டுப்படுத்தாது என்று பெய்ஜிங்கிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

மெனாரா மிட்டியில் பெரோடுவாவின் முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், இந்த ஒப்பந்தம் குறித்து சீனா விளக்கம் கோரியதாகவும், மலேசியா அதை வழங்கியதாகவும் உறுதிப்படுத்தினார்.

அவர்கள் சில விளக்கங்களை விரும்பினர். அதை வழங்கியுள்ளோம். இதில் நாம் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தாம் நினைப்பதாக அன்வார் கூறினார். சீனா மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உண்மையில், பிரதமர் லி கியாங்குடனான எனது இருதரப்பு சந்திப்பில், சீனாவுடனான நமது ஒத்துழைப்பைத் தொடர்வதைத் தடுக்கும் வகையில் ஒப்பந்தத்தில் எதுவும் இல்லை என்பதையும் தாம் அவருக்கு விளக்கியதாக அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *