சீனப் புத்தாண்டு – சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்கள்!

- Shan Siva
- 21 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 21: மலேசிய ரயில் நிறுவனமான KTMB சிறப்பு சீன புத்தாண்டு "சுற்றுலா" ரயில் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வரவிருக்கும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
KL சென்ட்ரல் நிலையத்திலிருந்து
பட்டர்வொர்த் நிலையம் வரை செல்லும் இந்தச் சிறப்பு சுற்றுப்பயணத்திற்கு மொத்தம் 792 டிக்கெட்டுகள் வழங்கப்படவிருக்கின்றன. இதற்காக
இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
டிக்கெட்டுகள் விற்பனை
இன்று, ஜனவரி 21, காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்தப் பயணத்திற்கான ஒரு வழி கட்டணம் உயர் வகுப்பு
இருக்கைகளுக்கு RM60 ஆகவும், பிரீமியர் வகுப்பு இருக்கைகளுக்கு RM90 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
buffet coach மற்றும் chillax coach வசதிகள் மூலம் பயணிகள் தனித்துவமான அனுபவத்தை
அனுபவிப்பார்கள். இது மிகவும்
நிதானமான மற்றும் மகிழ்ச்சிகரமான பயணத்தை உறுதி செய்யும் என்று அது கூறியது.
இந்த சிறப்பு
ரயில், KL சென்ட்ரல்
நிலையத்தில் தனது பயணத்தைத் தொடங்கி, தஞ்சோங் மாலிம், கம்பார், பத்து காஜா, ஈப்போ, கோலா காங்சர்,
தைப்பிங் மற்றும் புக்கிட் மெர்தாஜாம் ஆகிய ஏழு
நிலையங்களில் நின்று, பட்டர்வொர்த்
நிலையத்தில் இறுதி இலக்கை அடையும்.
டிக்கெட்டுகளை KTMB
மொபைல் பயன்பாடு (KITS), கியோஸ்க் இயந்திரங்கள், டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் www.ktmb.com.my என்ற KTMB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் பெறலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *