சீனப் புத்தாண்டின்போது சீன உணவகங்கள் 15% சேவைக் கட்டணத்தை விதிக்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,ஜன 22-

சீனப் புத்தாண்டு காலகட்டத்தில் சீன உணவகங்கள் கூடுதலாக சேவைக் கட்டணத்தை விதிப்பது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டில் அவை, 15 விழுக்காட்டு சேவைக் கட்டணத்தை விதிக்க விருப்பதை ஓர் உணவகச் சங்கம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டில் அவ்வுணவகங்கள் 10 விழுக்காட்டு சேவைக் கட்டணத்தை விதித்திருந்த வேளையில், இவ்வாண்டில் அதில் 5 விழுக்காட்டை அதிகரித்திருப்பதாக, மலேசிய சிங்கப்பூர் காபிக் கடை உரிமையாளர்களின் பொதுச் சங்கம் அறிவித்திருக்கிறது.

சீனப் புத்தாண்டின் முதல் இரண்டு நாட்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு "டிப்ஸ் கொடுப்பதற்காக இக்காலகட்டங்களில் இத்தகைய சேவைக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட உணவகங்கள் விதித்து வருவதாகவும் அச்சங்கம் கூறியது. இவ்வாண்டு சீனப் புத்தாண்டு வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அதாவது அடுத்த வாரம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கொண்டாடப்பட விருக்கிறது.

"வழக்கமாக, பெரும்பாலான உணவகங்கள் 10 விழுக்காட்டு சேவைக் கட்டணத்தை விதிக்கும் அல்லது அவ்விரு நாட்களில் திறக்கப்பட்டிருக்காது என்று அச்சங்கத் தலைவர் வோங் தியூ ஹோன் தெரிவித்தார்.
தாங்கள் விரும்புவதற்கேற்ப சேவைக் கட்டணத்தை விதிக்கும் தனது உறுப்பினர் விசயத்தில் சங்கம் தலையிடாது என்றும் வோங் கூறினார்.

"வாடிக்கையாளர்களுக்கு இக்கட்டணம் குறித்து சம்பந்தப்பட்ட உணவகங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன. ஆதலால், அந்த உணவகங்களில் உணவருந்துவதா இல்லையா என்பதை பொதுமக்கள் முடிவு செய்யலாம் என்று அவர் கூறினார்.
சீனப் பெருநாளின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில் உயர்வான சேவைக் கட்டணத்தை விதிக்கப்போவது குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பது தொடர்பில், சமூக வலைத் தளங்களில் ஓர் உணவகம் சாடப்பட்ட பின்னர், அச்சங்கங்கள் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

விதிக்கப்படவுள்ள 15 விழுக்காட்டு சேவைக் கட்டணத்தில், 6 விழுக்காடு விற்பனை மற்றும் சேவை வரி உள்ளடங்கி இருக்கவில்லை என்றும் அந்த உணவகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.குறிப்பாக பண்டிகைக் காலங்களின்போது, அளவுக்கு அதிகமான இத்தகைய சேவைக் கட்டண விதிப்புக்கு அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறதா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *