ஜனநாயகத்தின் மீதான மரியாதைக்கு இந்த விவாதம் அவசியம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 24: வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, ஜொகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காஸியுடன் விவாதிப்பதற்கான அழைப்பை முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

புத்ரி வாங்சா தொகுதிக்கான பக்காத்தான் ஹரப்பான் (PH) வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மஸ்லீ, ஜனநாயகத்தின் மீதான மரியாதையின் காரணமாகவும், மக்களிடையே அதிக அரசியல் முதிர்ச்சியை வளர்ப்பதற்கு விவாதங்கள் ஒரு தளமாகச் செயல்பட முடியும் என்ற தனது நம்பிக்கையின் காரணமாகவும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

முன்மொழியப்பட்ட இந்த விவாதம் கணிசமான பொது கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், அவரது பங்கேற்பை உறுதி செய்வதற்காக பல்வேறு கட்சிகள் அவரைத் தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார்.

மிகுந்த பணிவுடனும் மரியாதையுடனும், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் கொள்கைகளின் வழிகாட்டுதலின்படியும், இந்த அழைப்பை அல்லது சவாலை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்,.

இறைவன் நாடினால், இந்த விவாதத்தை அல்லது உரையாடலை மக்களுக்குக் கல்வி புகட்டவும், முதிர்ந்த அரசியல் கலாச்சாரத்தை மேம்படுத்தவும் ஒரு தளமாக நாம் ஒன்றிணைந்து உருவாக்கலாம என்று அவர் தமது முகநூல் பதிவில் கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்படும் ஜொகூர் மாநிலத் தேர்தல் மாபெரும் விவாதத்தை ஏற்பாடு செய்வதற்கான முன்மொழிவை, சமூக ஊடக செல்வாக்கு மிக்கவரான முஹம்மது ஹாரிஸ் நஸ்ரில் முன்வைத்தார். நேற்று மூவாரில் PH தலைவர் அன்வர் இப்ராஹிம் அனைத்து 56 PH வேட்பாளர்களையும் அறிவித்த பின்னர், இந்த முன்மொழிவு Redaksi.com முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது.

மாநிலத் தேர்தலுக்காக, PH கட்சியானது PKR கட்சியிலிருந்து 20 வேட்பாளர்களையும், அமானா கட்சியிலிருந்து 19 வேட்பாளர்களையும், DAP கட்சியிலிருந்து 17 வேட்பாளர்களையும் நிறுத்துகிறது.

தேர்தல் ஆணையம் இந்த சனிக்கிழமையை வேட்புமனுத் தாக்கல் நாளாகவும், ஜூலை 7-ஐ முன்கூட்டியே வாக்களிக்கும் நாளாகவும், ஜூலை 11-ஐ வாக்குப்பதிவு நாளாகவும் நிர்ணயித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *