இது நம்பிக்கையின் பரிசு! - பிரதமருக்கு நன்றி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 21: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசாங்கம் இலவசக் கல்வியை வழங்கும் என்று கூறியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வர் இப்ராஹிமுக்கு ஆட்டிசம் பாதிப்புள்ள ஒரு சிறுவன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

முகநூலில் ஒரு வீடியோவில், ராஜேந்திர வர்மா அந்தச் சிறுவன்  இந்த அறிவிப்பை அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் "நம்பிக்கையின் பரிசு" என்று அழைத்தார்.

நமது எதிர்காலம் முக்கியமானது என்பதையும், ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களின் சவால்கள் எதுவாக இருந்தாலும், மலேசியாவின் முன்னோக்கிப் பயணத்தில் ஒரு இடம் உண்டு என்பதையும் இது காட்டுகிறது என்று எஸ்.கே. செந்துல் உத்தாமாவின் ஒருங்கிணைந்த சிறப்புக் கல்வித் திட்ட மாணவருமான அவர்  கூறினார்.

பெற்றோருக்கு, நன்றி. நீங்கள் எங்கள் மிகப்பெரிய ஆதரவு. ஆசிரியர்களுக்கும் நன்றி, அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் எங்களை வழிநடத்தியதற்கு நன்றி. எங்களை நம்பியதற்கு பிரதமருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறப்புக் கல்வி மாணவர் பிரிவில் அதிக கலை கண்காட்சிகளை நடத்தியதற்காக மலேசியா சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ராஜேந்திரா, சிறப்புக் கல்வி குழுக்களில் உள்ள தனது சகாக்களை கற்றல் மற்றும் தங்களை நம்புவதில் "ஒருபோதும் கைவிட வேண்டாம்" என்றும் ஊக்குவித்தார்.

நேற்று தேசிய கல்வித் திட்டத்தைத் தொடங்கி வைத்த அன்வார், பொது உயர்கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சமூகக் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் உடனடியாக இலவசக் கல்வி வழங்கப்படும் என்று கூறினார்.

இந்தக் கொள்கை சுமார் 3,000 மாணவர்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *