இது வேற மாதிரி! மலாய் முஸ்லிம்களுக்காக புதிய திட்டம்! - அக்மால் சலே
- Shan Siva
- 10 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 10: செயலிழந்த முவாஃபாகத் நேஷனல் (MN) கூட்டணிக்குப் பதிலாக, வேறு ஒரு ஒப்பந்தத்தின் கீழ் PAS உடனான தனது கட்சியின் ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குவது குறித்து அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி MN கூட்டணியை மீண்டும் தொடங்குவதை நிராகரித்திருந்த நிலையில், மலாய்-முஸ்லிம் அரசியல் ஒற்றுமையை நிறுவுவதற்கான முயற்சிகள் வேறு ஒரு தளத்தின் கீழ் நடைபெறலாம் என்று அக்மால் கூறினார்.
எந்தப் பெயரைக் கொண்ட ஒரு தளத்தின் மூலமாகவும் ஒற்றுமையை அடைய முடியும். அதிலும் குறிப்பாக, ‘முவாஃபாகத் நேஷனல்’ என்ற பெயர் ஏற்கெனவே மற்றவர்களால் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்போது இது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
பெயர் முக்கியமல்ல, மலாய்-முஸ்லிம்களை ஒன்றிணைப்பதில் ஒரு புரிதலையும், பொதுவான நோக்கத்தையும் அல்லது திசையையும் எட்டுவதே மிக முக்கியம் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



