இது எங்கள் கட்சி விவகாரம்; உத்தரவிட நீங்கள் யார்?! - லிம் குவான் எங்கிற்கு அக்மால் சலே கேள்வி!

- Shan Siva
- 01 Jan, 2025
பெட்டாலிங் ஜெயா, ஜன 1: சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்
ரசாக்கிற்கு ஆதரவாக அடுத்த வாரம் ஒரு பேரணியை நடத்துவதற்கு அம்னோ எடுத்த முடிவு குறித்து, லிம் குவான் எங்கிற்கு தனது கட்சி எடுத்த முடிவை கண்டிக்க அதிகாரம்
இல்லை என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே தெரிவித்துள்ளார்.
ஜனவரி 6 பேரணிக்கும் "ஒற்றுமை அரசாங்கத்துடன்
எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
எங்களை
திட்டுவதற்கு நீங்கள் யார்? அம்னோவுக்கு
உத்தரவிட நீங்கள் யார்? என முகநூலில்
பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில் அவர் தெரிவித்துள்ளார்.
அம்னோவை லிம்
தொடர்ந்து விமர்சித்தால், கட்சியின்
அதிகமான உறுப்பினர்கள் பேரணியில் பங்கேற்பார்கள் என்றும் அக்மால் கூறினார்.
முன்னதாக,
டிஏபி தலைவர் லிம், நஜிப்பிற்கு ஆதரவான பேரணியை நடத்துவதற்கு பாஸ் உடன்
கைகோர்த்த அம்னோவை தாக்கியிருந்தார்.
ஒற்றுமை கூட்டணியில் அம்னோவின் நேர்மை குறித்து இது சந்தேகத்தை எழுப்புவதாகவும் லிம் தெரிவித்திருந்தார்.
அம்னோ மற்றும்
பாஸ் உறுப்பினர்களை உள்ளடக்கிய பேரணியில் நஜிப்பின் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வந்து
கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெர்சாத்து தலைவர்களும் கலந்து
கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *