ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் உள்ள கடைகள் மேம்படுத்தவுள்ளது-DBKL
- Muthu Kumar
- 15 Jan, 2025
கோலாலம்பூர். ஜன 15:
கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL, ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியை கவர்ச்சிகரமான பகுதியாக்க உருவாக்கும் நோக்கில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அழகு, தூய்மை பராமரிப்பு போன்ற முக்கிய அம்சங்கள் கையாளப்படுவதோடு, அப்பகுதியில் உள்ள பாழடைந்த நிலையில் இருக்கும் கடைகளைப் படிப்படியாக மேம்படுத்தும் என DBKL தெரிவித்துள்ளது.லெஸ்டாரி நயாகா திட்டத்தின் மூலம் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என்று DBKL ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இங்கு ஜாலான் மெலாயுவில் விற்பனையாளர்களை மறுசீரமைப்பதும், இந்த இடங்களில் விற்பனையாளர்களுக்கு புதிய, மிகவும் முறையான கடைகளை வழங்குவதும் விரைவில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களாகும்.அதே வேளையில், மேம்படுத்தும் பணியின் போது விற்பனையாளர்களின் வணிகங்கள் பாதிக்கப்படுத்துவதைத் தவிர்கும் வகையில் தற்காலிக வணிக இடங்களை வழங்க முன்னுரிமை அளிக்கப்படுவதாக DBKL கூறியது.
மேம்படுத்தல்கள் முடிந்ததும், ஜாலான் மெலாயு மற்றும் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவைச் சுற்றியுள்ள வணிகக் கடைகள் புதிய தோற்றத்தை அளிக்கும் என்று அது தெரிவித்தது.இந்த முயற்சி நகரின் கவர்ச்சியை மேம்படுத்தவும், அதிக பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் மேற்கொள்ளப்படுவதாக DBKL தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள காலாவதியான மற்றும் பாழடைந்த வணிகப் பகுதிகளை ஆய்வு செய்து மேம்படுத்துமாறு வலியுறுத்தினார்.நீண்ட காலமாக அங்கு இருக்கும் கடைகள், தலைநகரில் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய சுற்றுலாத் தலங்கள் என்று அன்வார் கூறினார்.

Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *