டிஏபியுடன் ஒத்துழைப்பு இல்லை: ஜொகூர் பாரிசான் நேஷனல் தனித்து களம் காணும் – ஒன் ஹபீஸ்
- Surendran Sumdraraj
- 08 Jun, 2026
ஜொகூர் பாரு, ஜூன் 8 –
ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) பாரிசான் நேஷனல் (BN) தனித்துப் போட்டியிடும் என்றும், டிஏபியுடன் எந்தவித ஒத்துழைப்பும் இருக்காது என்றும் ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் Onn Hafiz Ghazi உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஜொகூர் முதலமைச்சருமான அவர், இந்த நிலைப்பாடு இனவாத உணர்வு அல்லது அரசியல் அகந்தை காரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் விளக்கமளித்தார்.
“இது கொள்கை, மக்கள் வழங்கிய ஆணை மற்றும் ஜொகூர் மக்களுக்கான பொறுப்பு தொடர்பான விடயமாகும். டிஏபி இதுவரை ஜொகூர் பாரிசான் நேஷனல் அரசில் இடம்பெறவில்லை; இனியும் இடம்பெறாது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஜொகூர் மக்கள் தொடர்ந்து பாரிசான் நேஷனலுக்கு ஆதரவும் ஆட்சிக்கான ஆணையும் வழங்கினால் மட்டுமே இந்த நிலைப்பாட்டை உறுதியாகத் தொடர முடியும் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிகள் மற்றும் தேர்தல் ஒத்துழைப்புகள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஒன் ஹபீஸின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



