ஏமனுக்குள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஊடுருவல் – செங்கடலை கைப்பற்ற முயற்சியா?
- Surendran Sumdraraj
- 11 Sep, 2026
சனா, செப். 11 –
ஏமனின் செங்கடல் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான மோகாவிற்குள், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் நகரின் முக்கிய சந்திப்புகளில் நிலை கொண்டதால், மோகாவிற்கு செல்லும் பல சாலைகள் மூடப்பட்டதுடன், கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
மேற்கு ஏமனின் தைஸ் மாகாணத்தில் ஹவுதி படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. தைஸ் நகரத்தையும் மேற்கு கடற்கரையையும் இணைக்கும் முக்கிய விநியோகப் பாதையான அல்-ஷாகிரா பகுதியை ஹவுதிகள் கைப்பற்றியுள்ளதாக ஏமன் அரசு ஆதரவு படைகள் தெரிவித்துள்ளன.
இதற்குப் பதிலடியாக அரசு படைகள் ஹவுதி நிலைகளைக் குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



