சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு?

top-news

சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அபிதீன் இஸ்மாயில், தனக்கு கிடைத்து வரும் ஆதரவால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இன்று திவான் செர்பகுனா ஜாவியில் வேட்புமனுத் தினத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிடின்
ஒவ்வொரு முறையும் வாக்காளர்களை நான் நேரடியாக ​​சந்திக்கும் பொழுது எனக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது."

சுங்கை பக்காப்பில் உள்ள அனைத்து வாக்காளர்களையும் தன்னால் முடிந்தவரை தொடர்ந்து சந்திப்பேன் என்றும் அபிடின் கூறினார்.

தான் மறைந்த சட்ட மன்ற உறுப்பினர் அபாங் ஜாமுடன்  பணிபுரிந்துள்ளதாகவும்எனவே, வாக்காளர்களைச் சென்றடைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

பினாங்கில் உள்ள சுங்கை பக்காப் மாநிலத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பாஸ் அபிதீனுக்கும் பக்காத்தான் ஹராப்பானின் டாக்டர் ஜூஹாரி ஆரிஃபினுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்