புக்கிட் மெர்தாஜாமில் மூன்று வீடுகள் தீக்கிரையாகின! நான்கு வாகனங்கள் சேதம்
- Shan Siva
- 20 Jan, 2026
புக்கிட் மெர்தாஜாம், ஜன 20: பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், தாமான் குவார்
பெராஹுவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் எரிந்து நாசமாகின.
பினாங்கு தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறைக்கு அதிகாலை 3.29 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து பெனாண்டி, புக்கிட் மெர்தாஜாம் மற்றும் பண்டார் பெர்டா
நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக
பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ்
தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் ஒரு
டொயோட்டா யாரிஸ் கார் கிட்டத்தட்ட 90% நாசமானது.
ஒரு ஹோண்டா ஆர்எஸ்,
ஒரு ஹோண்டா வேவ் மற்றும் ஒரு சுஸுகி ஆகிய
மூன்று மோட்டார் சைக்கிள்கள் 10% முதல் 90% வரை சேதமடைந்தன.
ஒரு வீட்டிற்கு வெளியே 50 வயதுடைய ஒருவர் மயக்கமடைந்த நிலையில்
காணப்பட்டார்.
மருத்துவக் குழுவால்
உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அந்த நபர்
சீரான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள்
அதிகாலை 3.56 மணிக்குள் தீயை
கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதிகாலை 5.38 மணிக்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



