HRD Corp மூத்த அதிகாரிகள் மூவர் இடைநீக்கம்!
- Shan Siva
- 06 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 6: மனிதவள மேம்பாட்டு கழகமான HRD Corp, தனது மூத்த மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது. இவர்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்த பல்வேறு அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக HRD Corp தெரிவித்தது.
இந்த அறிக்கைகள்
நாடாளுமன்றத்தின் பொது கணக்குகள்
குழு (PAC), தணிக்கை
ஆணையம் (A-G) மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) ஆகியவற்றால் வெளியிடப்பட்டவையாகும் என அது கூறியது.
இந்த விவகாரம், அரசு தொடர்புடைய நிறுவனமான (GLC) HRD Corp-இன் பயன்படுத்தப்படாத லெவி நிதிகளின் நிர்வாகம், மேனாரா இக்லாஸ் (Menara Ikhlas) கட்டிடம் வாங்குதல், HRD Corp-இன் பங்கு முதலீட்டு (equity investment) நிர்வாகம்ஆகியவற்றுடன்
தொடர்புடையதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒரு புதிய மைய அமைப்பு” (new core system) தொடர்பான விவகாரமும் இதில் அடங்கும் என்றும் HRD Corp கூறியது. இந்த அமைப்புக்காக RM14 மில்லியன் மதிப்பிலான கொள்முதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டதுடன், மூன்று முறை பயனர் ஏற்றுக் கொள்ளும் சோதனைகள் (User Acceptance Test) தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து HRD Corp தலைமை நிர்வாக அதிகாரி ஷமீர் அசிஸ்,
இந்த
நோக்கத்திற்காக, தெளிவான
பணிக்கட்டளை, வரம்பு மற்றும்
விதிமுறைகளுடன், வெளிப்படைத்தன்மையும்
நேர்மையும் கொண்ட உள்நாட்டு விசாரணை நடைமுறை ஒன்றை HRD Corp அமல்படுத்தும் என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



