மலேசியா–சீனா உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளது – சீன தூதர் ஓயாங் யூஜிங்
- Surendran Sumdraraj
- 29 Sep, 2026
கோலாலம்பூர், செப். 29-
கடந்த ஐந்து ஆண்டுகளில் மலேசியா–சீனா இருதரப்பு உறவு மூன்று முக்கிய கட்ட முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாக மலேசியாவுக்கான சீன தூதராக தனது பணிக்காலத்தை நிறைவு செய்யவுள்ள ஓயாங் யூஜிங் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவு முதலில் விரிவான மூலோபாய கூட்டாண்மை என்ற நிலையிலிருந்து, பொதுவான எதிர்காலத்தைக் கொண்ட சீனா–மலேசிய சமூகமாக முன்னேறியது. பின்னர் அது தற்போது உயர்மட்ட மூலோபாய சமூக உறவாக மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“இந்த மூன்று முக்கிய முன்னேற்றங்களும் சீனா–மலேசிய உறவை புதிய நிலைக்குக் கொண்டு சென்றதுடன், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்கு மேலும் பரந்த வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன,” என ஓயாங் யூஜிங் தெரிவித்தார்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 77-ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் மலேசியாவில் தனது ஐந்து ஆண்டு தூதரகப் பணிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு கோலாலம்பூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



