சரவாக், சபாவில் மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய புயல் எச்சரிக்கை

top-news

கோலாலம்பூர், ஜன. 14-

சரவாக்,  சபாவின் சில பகுதிகளில் இன்று மாலை 5 மணி வரை கனமழை, இடியுடன் கூடிய புயல்,  பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு துறை (METMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

 சரவாக்கில் குச்சிங், செரியான், சமராஹான் பகுதிகளில் இவ்வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இதேபோல், சபாவில் தவாவ் (லஹாட் டத்தோக்), சண்டாக்கான் (கினபத்தாங்கன்) பகுதிகளும் இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

METMalaysia விளக்கமளிக்கையில், ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் அளவுக்கு தீவிரமான இடியுடன் கூடிய புயல் ஏற்படும் அறிகுறிகள் காணப்படும்போது அல்லது ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் போதே இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்படும் என்றது.

“இடியுடன் கூடிய புயல் குறித்த எச்சரிக்கை என்பது குறுகிய காலத்திற்கானதாகும். ஒவ்வொரு அறிவிப்பும் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்,” என்று METMalaysia தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *