மலேசியாவால் மட்டும் ஏன் முடியவில்லை? - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 19: நாட்டின் சுற்றுலாத் துறைக்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசியாவிற்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா இல்லா பயண ஏற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

காலாவதியான அதிகாரத்துவ நடைமுறைகளைக் கடந்து செல்ல மலேசியா தயாராக இருக்க வேண்டும் என்றும், சில நாடுகள் விதிக்கும் ஒருதலைப்பட்சமான தடைகள் குறித்து அதிக அக்கறை கொள்ளக்கூடாது என்றும் பிரதமர் கூறினார்.

ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் துருக்கிக்கும், இரண்டு மில்லியன் பேர் தாய்லாந்துக்கும் வருகை தரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து சுமார் 100,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே மலேசியாவைத் தங்கள் விடுமுறை இடமாகத் தேர்ந்தெடுப்பது வியக்கத்தக்கதாக உள்ளது என்று அவர் கூறினார்.

அவை இரண்டும் நமக்கு அருகிலுள்ள நாடுகள், அப்படியிருக்க ஏன் 100,000 ரஷ்யர்கள் மட்டுமே மலேசியாவிற்கு வருகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

விமானப் போக்குவரத்து இணைப்பு மற்றும் பணம் செலுத்தும் முறைகள் — குறிப்பாகப் பணம் செலுத்தும் வழிகள் — தொடர்பான சிக்கல்கள் நிலைமையை மிகவும் கடினமாக்குகின்றன. சில நேரங்களில், நாம் பழைய, காலாவதியான நடைமுறைகளில் அதிக ஈடுபாடு கொண்டு, மற்ற சில நாடுகள் எவ்வாறு எதிர்மறையாகப் பதிலளிக்கும் அல்லது எதிர்வினையாற்றும் என்பது குறித்து அதிக அக்கறை கொள்கிறோம்.

தாய்லாந்து ரஷ்யாவுடன் தொடர்ந்து நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது. இது மலேசியாவில் ஏன் நடப்பதில்லை?  ஏனெனில்,  நாம் அவர்களுக்குத் தகுந்த வசதிகளை வழங்குவதில்லை என்று  தனது இரண்டு நாள் பயணத்தை முடித்த பிறகு அன்வர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *