பெர்சாத்து ஏன் இன்னும் PN-ல் இருக்க வேண்டும்? - பாஸ் கேள்வி
- Shan Siva
- 10 Aug, 2026
கோலலம்பூர், ஆக 10: பெரிக்காத்தான்
நேஷனல் கூட்டணி சேதமடைந்துவிட்டது என்று பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின்
கூறியுள்ள நிலையில், பெர்சாத்து கட்சி ஏன் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனலில் இருக்க வேண்டும்? என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர்
துவான் இப்ராஹிம் துவான் மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
முகைதீன் யாசின் புதிய கூட்டணி அமைக்கப் போவதாக அறிவித்திருப்பது, பெர்சாத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனலில் இருந்து விலகப் போவதற்கான
அறிகுறியாகவே இருப்பதாக துவான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் ஏற்கனவே சேதமடைந்துவிட்டது என்றும், அதற்கு பாஸ் கட்சிதான் காரணம் என்றும் முகைதீன் கூறியிருப்பதைச்
சுட்டிக்காட்டிய அவர், சேதமடைந்ததாகக் கருதப்படும் கூட்டணியில் ஏன் தொடர்ந்து இருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பெர்சாத்துவின் தேர்தல்
இயந்திரத்தைத் தொடங்கி வைத்து பேசிய முகைதீன், தான் உருவாக்கிய பெரிக்காத்தான்
நேஷனல், அதன் ஆரம்பக் கொள்கைகளிலிருந்து விலகியதால் தற்போது
நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிட்டதாகக் கூறியிருந்தார்.
ஒரு காலத்தில் மக்கள் பெரிக்காத்தான் நேஷனல் மீது பெருமையும், தேர்தல்களில் பல தொகுதிகளை வெல்லும் என்ற நம்பிக்கையும் கொண்டிருந்ததாகக்
கூறிய அவர், தற்போது அந்தக் கூட்டணி சேதமடைந்துவிட்டது என்று விமர்சித்தார்.
மேலும், தற்போது பெரிக்காத்தான் நேஷனலுக்குத் தலைமை வகிக்கும் பாஸ் கட்சி, ஆட்சியை நடத்தும் திறனையும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்தும் திறனையும் நிரூபிக்கத் தவறிவிட்டதாகவும் முகைதீன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஹமட் சாம்சூரி
மொக்தார் நேற்று, பெர்சாத்து இன்னும் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியாகவே இருப்பதாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



