சினிமாவுக்காக எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறேன் - நடிகை சாக்ஷி அகர்வால்
- Surendran Sumdraraj
- 13 Apr, 2026
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை சாக்ஷி அகர்வால், சினிமாவுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தீயோர் கூடம்’ திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
‘தீயோர் கூடம்’ திரைப்படம் கிரைம் - திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சாக்ஷி அகர்வாலுடன் டேனியல் ஆனி போப், வையாபுரி, ஜாவா சுந்தரேசன், வசந்தி, ஜேஸ்பர், சத்யா மற்றும் சம்யுதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் தேவா வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து பேசிய சாக்ஷி அகர்வால், “என் திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். என்னை வாழவைக்கும் சினிமாவுக்காக எதையும் செய்யத் தயாராகவே இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும், திருமணம் ஆன பிறகும் நடிகைகளின் கலைப்பயணம் தொடர முடியும் என்பதையும் தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



