சிறுமியைக் கொடூரமாகத் தாக்கிய தாய் கைது!
- Sangeetha K Loganathan
- 11 Feb, 2025
பிப்ரவரி 11,
சிறுமியைப் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தலத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட 37 வயது பெண்ணைக் கைது செய்துள்ளதாக Arau மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Mohsin Md Rodi தெரிவித்தார். சம்மந்தப்பட்ட பெண் சிறுமியின் தாயார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெர்லிஸில் உள்ள Jejawi அங்காடிக் கடையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் இரவு 11.30 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்காடி கடையில் தொடர்ந்து அடம்பிடித்ததால் மகளை அடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள 37 வயது தாயார் வாக்குமூலம் அளித்துள்ளார். தாக்குதலுக்குள்ளானச் சிறுமியின் புருவங்களுக்குத் தையல் போடப்பட்டுள்ளதாகவும் முதுகிலும் இரு கைகளிலும் சிராய்ப்புக் காயங்கள் உள்ளதாகவும் Arau மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Mohsin Md Rodi தெரிவித்தார்.
Seorang ibu berusia 37 tahun ditahan polis selepas rakaman video dia memukul anak perempuannya tular di media sosial. Kejadian berlaku di sebuah kedai di Jejawi, Perlis. Kanak-kanak itu mengalami kecederaan pada kening, bahagian belakang badan dan tangan. Suspek mengaku bertindak demikian kerana anaknya meragam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



