கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்க்க கடத்தப்பட்ட சிறுமி துணி பையில் அடைப்பு!

- Muthu Kumar
- 16 Apr, 2025
சிரம்பான், ஏப்.16-
நெகிரி செம்பிலான், சிரம்பான் 2இல் உள்ள அப்டவுன் எவனியூவில் 16 வயது சிறுமியைக் கடத்திய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவளைத் துணிப்பையில் வைத்து மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் இச்சிறுமி ஒரு காரில் கடத்திச் சென்று ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹாய்லி முகமட் ஸைன் தெரிவித்தார்.இச்சம்பவத்திற்குப் பின்னணியாக 31 வயதுடைய பெண் ஈடுபட்டிருப்பதும் அவர் இந்த 6 பேரில் ஒருவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
20 முதல் 31 வயதிற்குட்பட்ட 3 ஆடவர்கள், 3 பெண்களும் நெகிரி செம்பிலானில் கடந்த திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். இன்னும் ஒருவன் தேடப்பட்டு வருகிறான் என்று புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோஸ்ரீ முகமட் ஷுஹாய்லி முகமட் ஸைன் குறிப்பிட்டார்.
Seorang remaja perempuan berusia 16 tahun diculik dan disembunyikan dalam guni di Seremban 2, Negeri Sembilan. Polis menahan enam suspek berusia 20 hingga 31 tahun, termasuk tiga wanita. Seorang lagi suspek masih diburu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *